Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலா இயக்கிய வர்மா!!  திடீரென்று OTT தளத்தில் ரிலீஸ்!!

இந்த  லாக்டவுன் காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பாலா இயக்கிய படம் என்றாலே தனி வரவேற்பு பெரும். அப்படிப்பட்ட பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகவே தான் இருக்கும்.

உதாரணமாக அவன் இவன், நந்தா, பரதேசி இப்படி கதாநாயகர்களையும் கதாநாயகி களையும் வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்துவது பாலாவின் சிறப்பம்சம்.

தற்போது பாலா இயக்கிய, விக்ரமின் மகன் துருவ்விக்ரமின் நடிப்பில் உருவான வர்மா படமானது தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் டீஸர் ஆல்ரெடி ரிலீஸாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version