கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!!

0
141
Veterinary Medicine Admission!! New information released by the University Vice-Chancellor!!

கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை!! பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட  புதிய தகவல்!!

வெள்ளிக்கிழமை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரில் நடைபெற்ற வெள்ளி விழாவானது  கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார்  கலந்துக்கொண்டு வெள்ளி விழா தூண் மற்றும் மூன்று நாள் நடைபெறும் கண்காட்சியும் தொடங்கி வைத்தார்.

இதனை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை  சந்தித்தார். இவர் செய்தியாளர்களிடம் தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த மற்ற மருத்துவ கல்லூரிகளும்  உள்ளது.

மேலும் தற்போது வரை  கால்நடை மருத்துவ படிப்பிற்கு 16,794 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஜூன் 12 ஆம் தேதி இணைய வழியில் தொடங்கியது. மேலும் ஜூன் 30  ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு புதிய மருத்துவ படிப்புகள் மற்றும் புதிய கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

அதற்கு அடுத்து தீவனங்கள் பற்றி கூறினார். கோழிகளுக்கு 3.5 லட்சம் டன் தீவனமும், மற்ற கால்நடைகளுக்கு  2 லட்சம் டன் தீவனமும் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் தீவன பயிர்களை அதிகம் விளைவிக்குமாறு கேட்டுக்கொண்டார் .