Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ம.நீ.ம கட்சியிலிருந்து விலகிய துணைத் தலைவர் மகேந்திரன்! இந்தக் கட்சியிலா இணையபோகிறார்!!!

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவர்களிள் கமல்ஹாசன் உட்பட யாருமே வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகுவதாக அறிவித்தனர்.
இதனால் ம.நீ.ம கட்சியில் மாபெரும் விரிசல் ஏற்பட்டது.

கட்சியில் இருந்து விலகியவர்களுல் முக்கியமானவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆர்.மகேந்திரன் கட்சியை விட்டு விலகுவதாகவும் தி.மு.க வில் இணைவதாகவும்ம் பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ஆர்.மகேந்திரன் 75-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளார்.

மேலும் சிலரும் கூட கட்சியை விட்டு விலகுவதாக வதந்திகள் பல பேசப்பட்டு வருகிறது. கட்சியின் துணைத் தலைவரே கட்சியை விட்டு விலகியதால் கட்சி கலைக்கப்படுமோ என்று சந்தேகம் எழுந்து வருகிறது. இது குறித்து கமலஹாசன் சார்பாக எந்த ஒரு பதிலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

பிக் பாஸ் ஷோ குறித்து அடிக்கடி ட்விட் செய்யும் கமலஹாசனுக்கு இதுகுறித்த ட்வீட் செய்ய எத்தனை நாட்கள் ஆகுமோ ?என நெட்டிசன்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

Exit mobile version