Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு

#image_title

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி! இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெரும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன, அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை திகழ்ந்தது. அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது, சட்டத்தின் ஆட்சி நடந்தது.
இன்றைய சூழ்நிலையில், சட்ட ஒழுங்கு படிப்படியாக சீர்குலைந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அரசு அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க உள்ள அதிமுக மாநில மாநாடு, ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை நோக்கி பார்க்கும் வகையில், அதிமுக மாநில மாநாடு இருக்கும்.
சென்னை வியாசர்பாடியில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட இளங்கோவன் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Exit mobile version