Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது – டிரம்ப் பரபரப்பு டுவிட்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்திருந்த கருத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அதிபர் பதவிக்கான தேர்தல் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றது. 

இன்று காலை முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. படிப்படியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இன்று காலை டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

அதாவது டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக கட்சி வெற்றி பெறுவதற்காக சதீத்திட்டம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவை டுவிட்டர்  நிறுவனம் மூடி மறைத்தும், கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் ஒரு டுவிட்டில் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது, “இந்த தேர்தலில் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது என்றும் ஜனநாயக கட்சியின் சதியை வெற்றியடைவதற்கு ஒருபோதும் விடமாட்டோம்” என்றும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி “இன்று இரவு மிகப்பெரிய வெற்றி” என்னும் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version