விடாமுயற்சி:
தல அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார் .
அஜித் திரிஷா காம்போ மீண்டும் இந்த திரைப்படத்தில் காணவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அசத்தி இருக்கிறார்கள்.
விமர்சனம்:
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்களில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் பிரபலங்கள் பார்த்து படத்தை குறித்த கருத்துக்களை விமர்சனமாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் ஆன கிரிஸ்டோபர் கனகராஜ் தனது twitter தளத்தில் பதிவிட்டு இருக்கும் கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அஜித் ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது… விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித், பாடல், ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் , அஜர்பைஜான் லொகேஷன், கார் ஆக்சன், அனிருத்தின் பிஜிஎம் உள்ளிட்ட அனைத்துமே படத்திற்கு சிறப்பை கொடுக்கிறது.
விடாமுயற்சி வீண்முயற்சி:
இந்த திரைப்படத்தில் வழக்கம் போலவே அஜித் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் திரிஷா மற்றும் அஜித்தின் ரொமான்டிக் காட்சிகள் டல்லடிக்கிறது. அர்ஜுன் மற்றும் ரெஜினாவின் கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கிறது. அனிருத்தின் மியூசிக் மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கிறது. அஜர்பஜைன் லொகேஷன் சூப்பராக இருக்கிறது. ஆனால் படத்தின் கதை ரொம்பவே மோசம்.
ஆம், படத்தில் எமோஷன் இல்லை, படத்தின் கதை சிறப்பாக வடிவமைக்கவில்லை, ட்விஸ்ட் இல்லை எக்ஸைட்மெண்ட் இல்லை, படத்தின் கதை சிறப்பாக வடிவமைக்கவில்லை. மொத்தத்தில் இந்த திரைப்படம் கடும் அதிர்த்தி தான் கொடுத்திருக்கிறது.
விடாமுயற்சி படத்திற்காக அஜித் போட்ட அத்தனை முயற்சியும் வீண் முயற்சியாகிவிட்டது என கிறிஸ்டோபர் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக அஜித்தின் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.