Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!!

Video of attack on Bihar citizens not true - DGP Sailendrababu!!

Video of attack on Bihar citizens not true - DGP Sailendrababu!!

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பீகாரை சேர்ந்தவர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவது போல் சமூக வலைதளங்களில் பரவியது.இந்த பதிவை கண்ட பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த சூழ்நிலையில் தமிழக காவல் துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் இரண்டு போலி வீடியோக்கள் பரவி வருகிறது, அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல காட்டப்பட்டுள்ளது, அந்த வீடியோ போலியானவை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் இருப்பது திருப்பூரில் இருக்கும் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதி கொண்டதாகும், மற்றொரு வீடியோவில் கோவை உள்ளூர் வாசிகள் மோதிக் கொண்டதாகும். இதுதான் உண்மை என  சைலேந்திரபாபு பாபு கூறியுள்ளார்.பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
Exit mobile version