Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியான இறந்தவர்களின் வீடியோ! கவர்னர் கண்டனம்!

கொல்கத்தாவில்  இறந்த உடல்களை அவமதிப்பு செய்வது குறித்து  மேற்கு வங்க கவர்னர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லி மாநிலத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மற்றொரு கொடூரம் ஒன்று நடந்துள்ளது. அதில்,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் 13 இறந்த உடல்களுடன் வந்த நகராட்சி வாகனத்தை  மறித்து  உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக  அதிலிருந்த உடல்கள் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்தவரின் உடலில் கழுத்தில் கயிறு கட்டி ஊழியர் ஒருவர் இழுத்துச் செல்வது வீடியோ பார்த்தவர்களை பதற செய்தது. இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த மேற்கு வங்க கவர்னர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அது  கொரோனாவால்   இறந்த நபர் கிடையாது.

அவர்கள் பிரேத பரிசோதனை மையத்தில் உரிமை கோரப்படாத உடல்கள் என விளக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், இறந்த உடல்களை இதுபோன்று அவமதிப்பது மனித குலத்திற்கே வெட்கக்கேடு என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். இந்த வீடியோ நாட்டு மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version