Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாகூர் பிரியாணி நாய்க்கு தான்..என்ற மீம்ஸ் ஆல் மனம் உடைந்த விக்கி மற்றும் நயன்தாரா!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Vignesh Shivan compared to a dog!! Wife Nayantara in agony!!

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரபல நடிகை நயன்தாரா காதலித்த பிறகு பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் விக்னேஷ் சிவனை நாய் என குறிப்பிட்டது அவரது மனைவிக்கு மிக வருத்தமாக இருந்தது என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்து முதல் நட்பாக பழகி, அந்த நட்பு காலப்போக்கில் காதலர்களாக மாறியது. இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களின் காதல் உறவை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் பின்பு தான் பல மீம்ஸ்கள் வைரலாகி வந்தன. அதில் நாகூர் பிரியாணி நாய்க்கு தான் என்று இருந்தால் யாராலும் மாற்ற முடியாது என பல மீம்ஸ்கள் பரவின.

அதை கண்டுகொள்ளாமல் இருவரும் விலகின. இந்த நிலையில் அவர்களின் ஆவணப்படம் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைகள் இருந்த நிலையில் அவர்களின் ஆவணப்படம் வெளியானது. அந்த ஆவணப்படத்தில் விக்னேஷ் தன்னை நாயுடன் ஒப்பிட்டதை குறிப்பிட்டு “ஏன் அழகான பெண் ஒரு பீஸ்டை காதலிக்க கூடாதா” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாழ்க்கை யாரும் எதிர்பார்க்காதது என தெரிவித்துள்ளார். அதில் பஸ் கண்டெக்டர் சூப்பர் ஸ்டார் ஆவது போல் என குறிபிட்டுள்ளார். அதற்கு நயன்தாரா நான் விக்னேஷ் வாழ்க்கையில் இல்லாமல் இருந்தால் மிகவும் அவர் சந்தோஷமாக இருந்திருப்பார் என கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து நயன்தாரா எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம் எனக் கூறினார்.

Exit mobile version