Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருப்பதியில் நடந்த விதிமீறல்! பகிரங்க மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்!

திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா உள்ளிட்ட இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

இவர்களுடைய திருமணம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் வெகு நாட்களாகவே இருந்து வந்தது.

அதோடு இவர்களின் திருமணம் நடைபெறுமா? அல்லது நடைபெறாதா? என்ற சந்தேகமும் எழுந்தது, இது தொடர்பாக திரை உலகில் பல கிசுகிசுக்களும் எழ தொடங்கியது.

அதேபோல பல விதமான வதந்திகளும் பரவத்தொடங்கியது, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்றுமுன்தினம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரின் திருமணம் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிலையில், திருமணம் முடிவடைந்த பிறகு நேற்றைய தினம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை கல்யாண உற்சவ சேவைகள் பங்கிட்டுக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் கோவில் முன்பு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.

அப்போது அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியில் காலணியுடன் புகைப்படங்கள் எடுத்து மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறிப்போனது.

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், பரபரப்பாக பேசப்பட்டன. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பாக தொலைபேசி மூலமாக விக்னேஷ் சிவனிடம் விசாரணை செய்திருக்கிறார்கள்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, இது தெரியாமல் நடந்த தவறு ஆகவே நடந்த தவறுக்கு அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்ற விதத்தில் கடிதம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், திருப்பதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையான் சுப்ரபாத சேவையில் பங்கேற்று கொள்ளவிருக்கிறார்கள்.

ஆகவே திருப்பதி மலையில் அவர்களை சந்தித்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறையைச் சார்ந்தவர்கள் நடந்த தவறு தொடர்பாக விசாரணை நடத்து வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விக்னேஷ் சிவன் தேவஸ்தானத்திற்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்றில் திருமணம் நடந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்று கொண்டோம் என கூறியிருக்கிறார்.

மேலும் அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். ஆகவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மறுபடியும் ஏழுமலையான் கோவில் முன்பு வந்தோம்.

எங்களை பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்ற காரணத்தால், விரைவாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இதன் காரணமாக, உண்டான பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கின்ற பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடிக் கொண்டிருப்பதை கவனிக்க தவறி விட்டோம், இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை திருப்பதி மலைக்கு இருவரும் வந்திருக்கிறோம்.

பல்வேறு காரணங்களால் திருப்பதி மலையில் எங்களுடைய திருமணத்தை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது என்று விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version