Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவதாரா என்று கூறும் அளவிற்கு நயன்தாராவை ஒட்டிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்! காரணம் இதுவா இருக்குமோ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும் தனது அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு  உயரத்தையும் உச்சத்தையும் புகழையும் அடைந்துள்ளார்.

இன்றுவரை நயன்தாராவிற்கு இணையாக தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நம்மால் எவ்வளவு ரசிகர்களை காண இயலுமோ அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார்கும் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு .

அதற்கு ஏற்றார் போலவே வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இணையான அளவு அதிக சம்பளம் வாங்குற ஒரே ஒரு நடிகை நயன்தாரா ஆவார். அவருக்கு நடந்த கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு இவர் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்தார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது லாக் டவுன்முடிந்த பின்பு திரும்ப வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர் என்ற செய்திகளும் அவ்வப்போது  வெளிவந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளி வந்த தகவலின்படி 2019 நயன்தாராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 71 கோடி என்று கூறப்படுகிறது .நெட்டிசன்கள் அனைவரும் இதனால்தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ஒட்டிக் கொண்டே இருக்கிறாரோ என்று கேலி செய்து கொண்டுள்ளனர்.

Exit mobile version