Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் ட்ராப் ஆனது

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஸ்வரன் இயக்க இருப்பதாக கூறப்படும் படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Exit mobile version