ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

0
164

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் படத்தை இயக்க தோன்றும். அப்படி இருக்க விக்ரம் வேதா படத்தை மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர்.

தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. தமிழ் தலைப்பான விக்ரம் வேதா தலைப்பே ஹிந்தியிலும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. படம் தமிழ் வெற்றி அடைந்தது போல ஹிந்தியிலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்