Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

’விஜய் 64’ படத்தின் டைட்டில் குறித்து கசிந்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை டெல்லியில் முடித்த படக்குழுவினர் அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகின்றனர். டிசம்பர் முதல்வார இறுதியில் ’தளபதி 64’ படக்குழு கர்நாடகா செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ள செய்தி நேற்று வெளியானது. இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. இந்த படம் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதும், நீட் தேர்வினால் அனிதா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்திற்கு ’டாக்டர்’ என்ற டைட்டில் வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு விஜய்யும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

வரும் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ’டாக்டர்’ என்ற டைட்டில் உண்மைதானா என்பது அன்றைய தினம் தெரியவரும்

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Exit mobile version