Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்

#image_title

மீண்டும் தெலுங்கு பட இயக்குனருடன் விஜய்! கதறும் ரசிகர்கள்
தமிழ் திரைப்பட துறையில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்போது இளம் இயக்குனர் வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லீயோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் முதல் பாதி காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து முடித்தவுடன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக விஜய் இறங்கியுள்ளார். தளபதி 68 என்ற டைட்டிலுடன் இயக்குனர் அட்லியோடு நான்காவது முறையாக கூட்டணி சேருகிறார் நடிகர் விஜய். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மூன்று திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் மீண்டும் இருவரும் இணைந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அட்லியுடன் படப்பிடிப்பை நிறைவு செய்த பின் மீண்டும் பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தளபதி 69 என்ற தலைப்புடன் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொங்கல் அன்று தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் மீண்டும் ஒரு தெலுங்கு பட இயக்குனருடன் விஜய் நடிக்க வேண்டாம் என அவரது ரசிகர்கள் சமுக வலைதளங்களில் தங்களது வேண்டுகோளை விஜய்க்கு பதிவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து வீர நரசிம்ம ரெட்டி என்ற திரைபடத்தை இயக்கினார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கோபிசந்த் நடிகர் விஜய்யிடம் ஒரு கதை கூறியதாகவும் அது விஜய்க்கு பிடித்து போகவே, அட்லியின் இயக்கத்தில் நடித்து முடித்தவுடன் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Exit mobile version