Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?

#image_title

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?

நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யூடியூப் சேனலில் பெண் ஒருவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை கண்ட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பெண் மீது மான நஷ்ட வழக்கு தொடர போடுவதாக தெரிவித்துள்ளார்.

“மாஸ் தமிழ்நாடு” யூடிப் சேனல் இந்த பெயர் கேட்டவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் தான். பல்வேறு யூடிப் சேனல் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உண்மை முகத்தை கொண்டு வந்தது அவர்தான். தனது மாஸ் தமிழ்நாடு என்ற யூடியூப் சேனல் மூலம், பல்வேறு புலனாய்வு செய்திகளை தயாரித்து வெளியிட்டுள்ளார். பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குறித்த உண்மையை அவர் வீடியோக்களாக பகிர்ந்து உள்ளார். தற்பொழுது மதன் ரவிச்சந்திரன் அவர்கள் மாஸ் தமிழ்நாடு யூடியூப் சேனலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாஸ் தமிழ்நாடு யூடியூப் சேனலின் நிறுவனர் என்று கூறப்படும் வெண்பா என்ற பெண் அந்த சேனலை பார்த்துக் கொண்டு வருகிறார். தற்போது மானஸ்தமிழ்நாடு யூடியூப் சேனலில் வெண்பா அவர்கள் பல்வேறு திரைப் பிரபலங்கள் பற்றியும் பேசி வருகிறார். தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சியையும்; அவர் எப்போது தோல்வியை அடைவார் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் காத்துக் கொண்டு இருப்பதாகவும் வெண்பா வீடியோவில் பேசியுள்ளார். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு விஜய் ஆண்டனி அவர்கள் சில இடையூறு செய்ததாகவும் வெண்பா வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் மிகவும் மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் வெண்பா மீது மான நஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தனக்கு கிடைக்கும் பணத்தை நலிவடைந்த இசை கலைஞர்களுக்கு தான் வழங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version