தளபதி 69 காவலர் வேடத்தில் விஜய் !! வெளியான தகவல்

0
121
Vijay as Thalapathy 69 cop!! Released information

தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற உச்ச நடிகர் விஜய். கடந்த மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில்  வெளியான திரைப்படம் “தி கோட் ” இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக படியான வசூலை அள்ளி குவித்தது.

விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த கட்சியை அறிமுகப்படுத்திய போது அடுத்து நடிக்கும் திரைப்படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்து கொள்வதாக கூறினார்.  இதை தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் கடைசி படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இந்த இயக்குனர் இதற்கு முன் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த மாதம் 4ம் தேதி இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் , பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மக்கள் காவல்துறை என்கவுண்டர் செய்யும் காட்சிகளை விரும்புகின்றனர்.

நான் இயக்கிய திரைப்படங்களில் அது போன்ற காட்சிகள் இருக்கும் இனிமேலும் எனது திரைப்படத்தில் அது போன்ற காட்சிகள் இடம்பெறும் என்று கூறினார். எனவே ரசிகர்கள் இதை தளபதி 69 திரைப்படத்தை கூறியதாகவும் தளபதி இத்திரைப்படத்தில் காவலர் வேடத்தில் நடிப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.