Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த விஜய் தேவர் கொண்டா!

பொதுவாக இன்ஸ்டாகிராம் என்றாலே அனைவரும் போஸ்ட் ஒன்றை போட்டு லைக்குகளை வாங்குவதற்காக தன்னுடைய போட்டோக்களைப் பதிவிடுவர். அதில் எந்த நடிகர், நடிகைகள் என்ன செய்கிறார்கள்? என்னவெல்லாம் போடுகிறார்கள்? என்பதை பார்கவே அவர்களை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.

 

நடிகைகள் என்றால் அவர்கள் எடுக்கும் போட்டோ ஷூட் டுகளும் போட்டோக்களையும் பதிவிடுவார்கள். நடிகர்கள் என்றால் அவர்கள் நடித்திருக்கும் படம் மற்றும் சமூக கருத்துக்களை பற்றிப் பதிவிடுவர்.

 

இவை அனைத்தையும் தாண்டி நடிகர்கள் அழகாகஇருக்கும் பட்சத்தில் பின்பற்றும் பெண் ரசிகைகள் அதிகமாக இருப்பார்கள்.

 

அந்த வகையில் மிகவும் அதிகமான இன்ஸ்டாகிராம் பாலோயர்களை கொண்டு விஜய் தேவர்கொண்டா முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு மட்டும் மொத்தம் 12 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் உள்ளனராம்.

 

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லிகர் படத்தில் நடித்து வருகிறார்.

 

இவரது சிரிப்புக்கு மொத்த பெண்கள் கூட்டமே ஆடிதான் போய் இருக்கிறார்கள். அவ்வளவு அழகு அவர்.

இவரை அடுத்து அல்லு அர்ஜூன் 11.8 பாலோயர்ஸ், மகேஷ் பாபு 6.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Exit mobile version