டைம்ஸ் பத்திரிக்கை சார்பாக நடத்தப்படும் மக்களால் மிகவும் விரும்பப்படும் நபர்கள் பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
சென்ற ஐந்து வருடங்களில் விஜய் தேவரகொண்டா அவர்களின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்திய அளவில் ரசிகர்களை பெற்றிருக்கின்ற ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்திய அளவில் இவருடைய திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது.
இது பல வருடங்களாக இடைவிடாமல் முயற்சித்த அவருக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெற்றி. அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
தற்சமயம் விஜய்தேவரகொண்டா மறுபடியும் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார். டைம்ஸ் பத்திரிகை சார்பாக நடத்தப்படும் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஆண்கள் என்ற சர்வேயில் விஜய்தேவரகொண்டா தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் முதலிடம் பெற்றிருக்கிறார்.
கடந்த 2019, ௨௦௨௦, 2021 என மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் மற்ற நடிகர்கள் நுழைவதற்கு முடியாது. ஆனால் விஜய்தேவரகொண்டா தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.a இதனை வைத்து அவருடைய வளர்ச்சியை நாம் கணித்து விட இயலும்
புதிய சாதனையை படைத்த விஜய் தேவரகொண்டா!
