Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ‘லைகர்’ டிரைலர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘லைகர்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளைப் படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி படத்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. டிரைலரில் விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரைலரின் இறுதியில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் இடம்பெறும் காட்சிகளும் அமைந்துள்ளன. வழக்கமான பாக்சிங் படங்கள் போல இல்லாமல் லைகர் படத்தின் மேக்கிங் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version