Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.

இந்நிலையில் அரசியல்வாதிகளை சீண்டும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த் விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘ரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். விஜய் எங்களுக்கு மாஸ்டர் ஆகவே இருக்க விரும்புகிறோம். தயவு செய்து உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்… இப்படிக்கு மெய்வேலியாய் நிற்கும் ரசிகர்கள்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற போஸ்டர் ஒன்றை மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ எனக் கூறுவது போல அமைந்திருந்தது.

எப்படியோ தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார்கள்…. அது எங்கு போகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version