விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்!
திருப்பூரை சேர்ந்த ஹரி என்பவர் தீவிர விஜய் ரசிகர்.இவரது டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது.வாத்தி ரைடு என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹரி அவரது கோரிக்கையை வெளியிட்டார்.அவரது ட்விட்டர் பக்கத்தின் கோரிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனையடுத்து ஹரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுள்ளார்.அதில் ஹரி கூறியது, தனது தங்கை ஏழாம் வகுப்பு தனியார் பள்ளியில் பயின்று வருகிறாள்.அவளுக்கு இப்பொழுது அரையாண்டு தேர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.ஆனால் எனது தங்கை இத்தேர்வுகளை எழுத அப்பள்ளி அனுமதிக்கவில்லை.
கொரொனோ கால கட்டத்தில் வேலைவாய்புகள் ஏதுமில்லா காரணத்தினால் எனது அப்பாவால் எவ்வித வருமானத்தையும் ஈட்ட முடியவில்லை.ஆகையால் பள்ளிக்கு கட்டணம் கட்ட முடியவில்லை.பள்ளி கட்டணம் கட்டாததால் எனது தங்கையை அரையாண்டு தேர்வு எழுத அப்பள்ளி அனுமதிக்கவில்லை.இதையடுத்து அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்றாலும் கட்டணம் செலுத்தாமல் TC தர இயலாது என கூறிவிட்டனர்.என் தங்கை பரீட்சை எழுத முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.என ஹரி அவரது உருக்கமான கோரிக்கையை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இப்பதிவை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனுக்கு திருப்பூர் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.