விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது!

0
112
thalapathy 68

விஜய் ரசிகர்களே உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது!

2023 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் முன்னணி கதாபாத்திரங்களாக சஞ்சய்தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவமேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. இந்த லியோ திரைப்படமானது, இம்மாதம் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தின் டிக்கெட் ரிசர்வானது தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

லியோ திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் அவரது 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னால் அதை உறுதி செய்யும் வகையில் இப்படத்திற்கான பூஜைகளும் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்பட்டது.

பெயர் வைக்காத இந்த தளபதி 68 திரைப்படத்தின் பட பூஜையின் புகைப்படங்களும், சமூக தளத்தில் வெளியாகி நல்ல வைரலை பெற்றது.இதனை தொடர்ந்து இப் படத்தினை பற்றி ஒரு சில அப்டேடுகள் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி 68 திரைப்படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்திரி நடிக்க இருப்பதாகவும் மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் (பிரபுதேவா, பிரசாந்த், ரியாஸ் கான், நடிகர் மோகன், லைலா, மற்றும் சினேகா) போன்ற பல திரைப்பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபு தேவா மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றறிந்தனர்.இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேடுகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.