தயாரிப்பு நிறுவனத்தோடு சண்டையிட்ட விஜய்…. அடி மேல் அடி வாங்கும் எச் வினோத்…????

0
212
#image_title

தயாரிப்பு நிறுவனத்தோடு சண்டையிட்ட விஜய்…. அடி மேல் அடி வாங்கும் எச் வினோத்…????

நடிகர் விஜய் அவரது 69 வது படம் தான் இறுதி படம் என்றும், அதன் பின்னர் முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகிறேன் எனவும் அறிவித்திருந்தார். அப்போதே இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிறுவனம் தான் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த படத்தை பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் எனவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. எனினும் இதில் எந்த ஒரு விஷயமும் உறுதி செய்யப்படவில்லை. அதாவது இவை அனைத்தும் வேறு பேச்சாக மட்டுமே இருந்துள்ளன. இதுதொடார்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

இப்படி படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய்க்கு தெரியாமலேயே படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த விஷயம் எப்படியோ நடிகர் விஜய் காதுக்கு செல்ல கடுப்பான விஜய் படமே இன்னும் உறுதியாகாத நிலையில், எப்படி இதுபோன்ற விஷயத்தை செய்யலாம் என்று கேட்டதோடு, உங்களுடன் படம் பண்ண போவதில்லை என்று அதிரடியாக கூறிவிட்டாராம். இதில் இயக்குனர் வினோத் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

தயாரிப்பாளர் மாறி இருப்பதால் வினோத் தான் படத்தை இயக்க போகிறாரா அல்லது வேறு இயக்குனர் மாறுவாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே கமல் பல மாதங்களாக காக்க வைத்து வினோத்தை கழட்டி விட்டார். அடுத்து தனுஷும் அதையே தான் செய்தார். இப்போது விஜய்யும் கழட்டி விட்டால் அவ்வளவு தான் என பேசி வருகிறார்கள்.