TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் ஆளும் கட்சி எனத் தொடங்கி மாற்று கட்சியினர் வரை பலரும் அரசியல் சார்ந்த வியூகங்களை திட்டமிட தொடங்கி விட்டனர். அந்தவகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களுக்கென ஆலோசகர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்றனர். அந்தவகையில் பாஜக திமுக எனத் தொடங்கி பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோருடன் தவெக விஜய் 1 மணி நேரமாக ஆலோசனை செய்துள்ளார்.
இதில் அரசியளின் அடுத்த நகர்வு எப்படி எடுக்க வேண்டும்? சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எம்மாறியான யுக்தியை கையாள வேண்டுமெல்லாம் கேட்டுள்ளாராம். குறிப்பாக நடந்து முடிந்த மாநாடு எனத் தொடங்கி அனைத்திலும் விஜய்யை முழு அரசியல்வாதியாக செதுக்கி வருவது அக் கட்சியின் ஜான் ஆரோக்கியசாமி தான். இப்படி இருக்கையில் இவர் பிகே விடவும் சில அறிவுரைகளை எடுத்துள்ளாராம். இவர் முழுமையாக தவெக-விற்காக செயல்பட முடியாது.
அதற்கு முக்கிய காரணம் ஐபேக் நிறுவனத்தில் இவர் இல்லாமல் இருப்பது தான். அதேபோல இந்த நிறுவனம் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-விற்கு வேலை பார்த்தது. அதே போல இந்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதனால் இவர் அரசியல் குறித்த கட்டமைப்பு பற்றி எடுத்துரைத்து வாக்கு வங்கியை எப்படி கவர வேண்டும் என்ற திட்டங்களை மட்டுமே விஜய்-க்கு புகுத்தியுள்ளாராம்.
அதன்படி வீட்டில் ஒருத்தர் வாக்காவது பெற முயற்சிக்க வேண்டும், அதற்கேற்றார் போல கள பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக திமுக வாக்குவங்கியை பெருமளவில் கலைக்க தங்களால் மட்டுமே முடியும் என்பதால் அதற்கான திட்டங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.