Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 13ம் தேதி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அப்பொழுது வரி தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை செய்யும் அமர்வு வழக்கை மாற்றம் செய்ய பதிவுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு இன்று இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வருகின்றது.

நீதிபதிகள் என்ன கூறுவார்கள் என்று தெரியாமல், ரசிகர்கள் மட்டும் அல்லாமல் விஜய் தரப்பில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version