Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!

Vijay inciting bloodlust among the youth.. New panchayat for the film Code..!!

Vijay inciting bloodlust among the youth.. New panchayat for the film Code..!!

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!

ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் படம் வெளியாகும் முன்பு ஏதாவது ஒரு பஞ்சாயத்து தயாராக இருக்கும். அவரின் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி யாராவது ஒரு குரூப் போர்கொடி தூக்கி இருப்பார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே இந்த பஞ்சாயத்து என்றால், இப்போது அரசியல் கட்சி தலைவராக வேறு மாறிவிட்டார். இனி கேட்கவே வேண்டாம்.

அந்த வகையில் விஜய்யின் கோட் படத்திற்கு இப்போதே பஞ்சாயத்து தொடங்கி விட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.

அதனை தொடர்ந்து தமிழ் புத்தாண்டான நேற்று கோட் படத்தின் பார்ட்டி ஒன்னு என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இப்போது பாடலை வைத்து தான் பஞ்சாயத்தை தொடங்கியுள்ளனர். இந்த பாடலை விஜய் அவரின் சொந்த குரலில் பாடியுள்ளார். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் பாடலுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால், போதைப்பொருட்கள் மற்றும் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் பாடல் காட்சிகள் இருப்பதாகவும், விழிப்புணர்வு வாசகங்கள் கூட இடம்பெறவிலை எனவும் கூறி சிலர் நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமல்ல ரத்தம் பத்தட்டும் விசில் போடு நண்பா நண்பி என்ற பாடல் வரிகள் மூலம் இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டுகிறார் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி இந்த பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு அர்த்தம் கூறி விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லியோ படத்திற்கும் இதுபோன்ற புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் படம் வெளியாகும் சமயத்தில் இதுபோன்ற பஞ்சாயத்துகள் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

Exit mobile version