TVK: விஜய் அரசியலில் நுழைந்தாலும் வெற்றிபெற முடியாது என ரஜினி அண்ணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அதன் கொள்கை குறித்து முழு விளக்கத்தையும் தனது முதல் மாநாட்டில் அறிவித்தார். மேற்கொண்டு எந்த ஒரு கட்சியும் செய்யாத வண்ணம் அஞ்சலை அம்மாள் வேலுநாச்சியார் உள்ளிட்டவர்களின் போஸ்டரானது தனது போஸ்டருடன் வைத்திருந்தார். இவ்வாறு இருக்கையில் இவர் கட்சி ஆரம்பித்தது குறித்து பல தரப்பிலிருந்து கருத்து தெரிவித்த வருகின்றனர். குறிப்பாக இவர் மாநாட்டில் ஊழல் குடும்பம் மற்றும் பிளவுவாத அரசியலுக்கு நம் கட்சி மிகவும் எதிரென்று கூறியுள்ளார்.
இவர் நேரடியாகவே திமுக மற்றும் பாஜகவை தாக்கி பேசியதால் அதன் கூட்டணி கட்சிகள் என அனைவரிடத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்வாறு இருக்கையில் ரஜினியையும் மறைமுகமாகவே அந்த மாநாட்டில் பேசியிருந்தார். நம்மை வாழ வைத்தவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும், சுயநலவாதியாக இருக்கக் கூடாது என சூசகமாக ரஜினியை கூறியிருப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு அப்படியே பின்னடைவை சந்தித்தது தான் இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு இருக்கையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் விஜய் கட்சி தொடங்கியது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார், அதில் கமலை போல அவரும் வரட்டும் ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.
வந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை, அரசியலில் எதுவும் சாதிக்க முடியாது, எதுவாக இருந்தாலும் யோசித்து செய்யட்டும் என எதிர்மறையாகவே பேசி உள்ளார். தற்போதுள்ள ஆசையினால் விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார். இது நாளடைவில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம், ஆனால் ஜெயிப்பது என்பது கஷ்டம் என கூறியிருப்பது தவெக தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.