Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயின் கையில் இருக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுடைய ஆதரவு காரணமாக, கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து நடிகர்களும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயங்கிய சமயத்தில் தைரியமாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டார் நடிகர் விஜய்.

இந்த திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களும் இதனை அடுத்து திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். நடிகர் விஜய் ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களின் குடும்பங்களிலும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதாவது நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என்றுதான் தெரிவிக்க வேண்டும்.

அந்த அளவிற்கு பல ரசிகர்களை வைத்து இருக்கின்றார். 6 வயதிலிருந்து 60 வயது வரையில் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படும் ஒரு நபராக விஜய் இருந்து வருகிறார். அண்மைக்காலமாக விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் தற்சமயம் நடிகர் விஜய் இரண்டு குழந்தைகள் கையில் வைத்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

தற்சமயம் அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது அந்த குழந்தைகளின் தாய் தந்தையர் யார் என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பெரிய நடிகையாக பிரபலமானார் வனிதா விஜயகுமார் இவரது வீட்டு நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் பங்கேற்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அனிதா தன் மகன் ஸ்ரீஹரியை விஜய் தூக்கி வைத்திருக்கின்றார். தற்சமயம் இந்த புகைப்படம்தான் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version