முழு கடனையும் அடைத்து விடுகிறேன் – இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா

0
116

முழு கடனையும் அடைத்து விடுகிறேன் – இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா

இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. மதுபான ஆலை, விமான நிறுவனம், தொலைக்காட்சி, ஐபிஎல் கிரிக்கட் அணி என பல தொழில்களை நடத்தி வந்த அவர், பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் அளவிற்க்கு பெற்றிருந்தார். அந்த கடனைத் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார்.

இதனையடுத்து அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, அவர் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் தான் பெற்ற முழு கடனையும் 100 சதவீதம் திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றும் தனகுக் எதிரான அனைத்து வழக்குகளை முடித்துவிடுங்கள் என்று மத்திய அரசிடம் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தற்காக நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கேற்றார் போல் ரூபாய் நோட்டுக்களை அச்சிடலாம். ஆனால் என்னை போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீத கடனை வங்கிகளிடம் திருப்பி செலுத்துகிறேன் என பல முறை கோரிக்கை விடுத்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. நான் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்தி விடுகிறேன். நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும், கைவிடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இனி தப்பிக்க முடியாது என்று புரிந்து கொண்ட விஜய் மல்லையா இந்திய அரசிடம் சரணடைந்துள்ளதே அவரின் இந்த கோரிக்கை காட்டுவதாக அனைவரும் கருதுகின்றனர். அவரின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்குமா?