Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உச்சநீதி மன்றத்தையே கதறவிட்ட விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் பரிவர்த்தனை செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2014ஆம் வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கானது நேற்று மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தண்டனை குறித்து அந்த நபரின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனாலும் பலமுறை வாய்ப்புகள் வழங்கியும் அவர் இதுவரையில் ஆஜராகவில்லை என்று தெரிவித்தார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம் நீதிமன்றத்தின் நிலை நவம்பர் 30 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

அந்த உத்தரவின் அடிப்படையில், உணர்ந்துகொள்ள குற்றவாளிக்கு 2 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது . இந்த அவகாசத்தை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தடை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ள தவறினால் தண்டனை விவரங்களை நீதிமன்றமே அறிவிக்கும் என்று உத்தரவிட்டார்கள்.

Exit mobile version