முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பின், வலுவான ஆளுமை அதிமுகவில் இல்லை என்றாகிவிட்டது. மேலும் OPS தலைமையில் அதிமுக மீட்பு தொண்டர்கள் குழு, TTV தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அதிமுக மூன்று கட்சிகளாக உடைந்து உள்ளது.
மேலும் இந்த நிலை எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்ற சூழல் நிலவி வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வரும் காலங்களில் கூட்டணி அமைத்தே தேர்தல் சந்திக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஒரு தகவல் சமூக ஊடங்களில் பரவி வருகிறது.
அதாவது விஜயுடன் மதுரையில் அதிமுக நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும். மேலும் அதிமுக தவெக கூட்டணியில் விஜய்க்கு 60 தொகுதிகள் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
மேலும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது தான் புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். அவர் கூட்டணி வைப்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கூற முடியவில்லை. வருங்காலங்களில் விஜய் -யின் அரசியல் நகர்வுகள் கூட்டணியை தீர்மானிக்கும்.