மாஸ்டர் தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய்… திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

0
174

மாஸ்டர் தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய்… திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யின் இரு கல்யாண மண்டபங்களை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.

நடிகர் விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இதையடுத்து மீண்டும் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார் இயக்கும் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லலித்துக்கும் விஜய்க்கும் இடையே நடந்த ஒப்பந்தம் ஒன்று இப்போது முடிவுக்கு வந்துள்ளது. விஜய்யின் ஷோபா கல்யாண மண்டபம் மற்றும் சங்கீதா கல்யாண மண்டபம் ஆகிய இரண்டையும் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார் லலித்.

ஆனால் இப்போது அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட விஜய், இரண்டு மண்டபங்களையும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளாராம். அந்த இடங்களில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.