நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் , தென் இந்தய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது அரசியலில்களத்தல் கால்பதிக்க தொடங்கியுள்ளார்.
மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவரது கட்சி மாநாடிற்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்று வருகிறது.
தமிழக 2026 சட்டமன்ற தேர்தலை தனது இலக்காக கொண்டு செயல்படுவதாக தமிழக வெற்றி கழக கட்சி தலைமை அறிவித்திருந்தது. அடுத்த படியாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அக்கட்சி பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந் தெரிவித்து இருந்தார்.
இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர், அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர், இந்த நிலையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக கட்சி முதன் முதலில் 1974ஆம் ஆண்டு பொது தேர்தலை சந்தித்தது, அத்தேர்தலில்அதிமுக போட்டியிட 30 இடங்களில் 12 இடங்களை கைபற்றியது, இந்த தேர்தலில் 27சதவீத வாக்குகளை பெற்று இருந்த நிலையிலும்தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை,இருப்பினும் புதுச்சேரியில் தான் முதலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் தனது வியூகத்தை வகுக்க தொடங்கியுள்ளது.