வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர இயலுமா என்று கேட்டிருக்கிறார். அதோடு தங்கள் மீது குறைகளை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை எதற்காக இவர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
மணப்பாறை சட்டசபைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் அவர்களை ஆதரிக்கும் விதமாக விஜயபிரபாகரன் வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நான் முதன்முதலில் அரசியலில் இறங்கிய இடம் இந்த மணப்பாறை தான் ஆகவே முதல் சட்டசபை தேர்தலில் நான் இங்கே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது இதற்கு முன்பு நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தோம் ஆனால் இப்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்திருக்கிறோம். காரணம் இந்த கட்சியில் அதிமுகவின் தொண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எதிர்வரும் தேர்தலில் நம்முடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும். அதோடு சிறுபான்மையின மக்களும் எங்களுக்கு எப்பொழுதும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அதோடு அவர்களுக்கும் எங்களுக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறது. அவர்களுக்கு விஜயகாந்த் எப்பொழுதும் நல்லதையே செய்து இருக்கிறார். இதன் காரணமாகத்தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி என்று வைக்கப்பட்டது. அதன்பிறகு பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவைகள் காரணமாக சண்முகப்பாண்டியன் என்று மாற்றி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் விஜய பிரபாகரன்.
உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!
