Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்தா!! விஜயின் மாமா பதிலடி!!

Vijay-Sangeeta couple divorce!! Vijay's uncle retaliates!!

Vijay-Sangeeta couple divorce!! Vijay's uncle retaliates!!

சமீபாலமாகவே சூழ்நிலை காரணமாக விஜயும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை தெரிந்துகொண்ட நெட்டிசன்கள் இவ்விருவரும் கூடிய விரைவில் விவகாரத்து செய்ய போகிறார்கள் என்ற செய்தியை பரப்பி வருகின்றனர். நடிகர் விஜய் தனது இறுதி படமான கதாநாயகன் படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் அரசியலில் முழுக்க முழுக்க ஈடுபட போகிறார் என்பதற்காக இந்தப் படத்தை வெகு விரைவாக முடிக்க அப்படக் குழு விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சூழ்நிலை இவ்வாறு இருக்க தளபதி சங்கீதா தம்பதியினர் விவாகரத்து செய்யப் போகின்றனர் என்றச் செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வதந்தியாக கூட இது இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சமீபத்தில் விஜயின் மாமாவான ஒளிப்பதிவாளர் செல்வகுமார் தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். என்னை விட ரசிகர்களே விஜயை நன்கு கவனித்து வருகின்றனர். இந்த செய்தியில் எவ்வளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த வதந்தியை சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் தான் பரப்பிருக்க வேண்டும். விஜய் அவர் நலமாக தான் உள்ளார். குடும்பத்தோடு இணைந்து தான் உள்ளார்.

அவர்களுக்கு குடும்பம் ஆளுக்கு ஒரு திசையில் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டு உள்ளது. விஜயின் மகன் லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார். எனவே தாய், மகளின் பாதுகாப்புக்காகவும், படிப்பிற்காகவும் அமெரிக்காவில் மகளுடன் தங்கி உள்ளார். இங்கு அவர் பிஸியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர்கள் குடும்பம் பிரிந்து உள்ளது. இச்செய்தியை சோசியல் மீடியாக்காரர்கள் வேறு விதமாக கூறுவது எல்லாம் உண்மையாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version