Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

நடிகர் போண்டா மணிக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

தமிழ் நகைச்சுவை நடிகரான போண்டா மணி சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக அவரின் சக நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவரை சந்தித்து முழு செலவையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இப்போது நடிகர் விஜய் சேதுபதியின் போண்டா மணியின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்கம் சார்பாக போண்டா மணியை சந்தித்து நடிகர் மனோபாலா நிதியுதவி அளித்திருந்தார். இப்போது உடல்நிலை சீராகியுள்ள போண்டா மணி இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளதாக சொல்லப்படுகிறது. தேவைப்பட்டால் அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version