Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி.

 

இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் தெலுங்கு டப்பிங், மற்றும் உப்பென்னா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

 

இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம். பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் எடுக்க உள்ளார்களாம்.

 

இந்த படத்திற்கான கதையையும் விஜய் சேதுபதியிடம் சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. படம் குறைந்த பட்ஜெட் என்பதால் அவருக்கு சம்பளம் எதுவும் இல்லையாம்.

 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சம்பளத்துக்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version