Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய்க்காக கொந்தளித்த விஜய்சேதுபதி: பரபரப்பு டுவீட்

சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் ஏஜிஎஸ் மற்றும் அன்புச்செழியன் வீட்டிலும் ரெய்டு செய்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது

இந்த செய்தியை பார்த்த விஜய்சேதுபதி தனது டுவிட்டர் தளத்தில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மட்டுமின்றி நடிகை ஆர்த்தியும் தனது டுவிட்டர் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version