Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் சேதுபதியின் படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு! தகிடதோம் ஆடும் தியேட்டர்காரர்கள்!

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் முதன் முறையாக ஒரு புதிய படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள செய்தி பரவி வருகிறது.

விஜய் சேதுபதி நடித்த கா/பே ரணசிங்கம் எனும் தமிழ் படம் சன் டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்ப பட உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி நேரடியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்தப் படத்தின் OTT உரிமையை ZEE5 நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே OTTயில் வெளியான பிறகு ஜீ தமிழ் சேனலில் அன்றைக்கே அப்படத்தை எதிர்பார்க்கலாம்.

மேலும் இதைப் போன்றே இப்படத்தினை ஜி5 ப்ளஸ் போன்ற OTTதளங்களில் அக்டோபர் 2ம் தேதி வெளியிட போவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய்சேதுபதி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் பிரபல நடிகரான டோவினோ தோமஸ் நடித்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் என்ற படம் நேரடியாக டிவி சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதைப் பின்பற்றியே விஜய் சேதுபதியின் இந்தப் படமும் நேரடியாக டிவி சேனலில் ஒளிபரப்பாக போகிறதாம்.

Exit mobile version