Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் மகன் சஞ்சய் சோஷியல் மீடியாவில் இருக்காரா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் மகன் சஞ்சய் சோஷியல் மீடியாவில் இருக்காரா… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் சமூகவலைதளங்களில் சில கணக்குகள் உருவாக்கப்பட்டு போலியான தகவல்கள் பரவுவதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்து வருகின்றன. படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து இதுபோல மீண்டும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக இயக்குனர் வம்சி புதிய உத்தரவு ஒன்றை படப்பிடிப்புக் குழுவினர் யாரும் செல்போனை செட்டுக்குள் எடுத்து வரக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இருக்கும் ஒரு சமூகவலைதளக் கணக்கில் இருந்து “யாரும் வாரிசு படத்தின் லீக்கான காட்சிகளைப் பரப்பாதீர்கள்” என்று ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பலரும் அந்த ட்வீட்டை சஞ்சய்தான் பதிவிட்டுள்ளார் என நினைத்து வந்துள்ளனர்.

ஆனால் இப்போது விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது “விஜய்யின் மகன் சஞ்சய் எந்தவொரு சமூகவலைதளத்திலும் இல்லை. அவர் பெயரில் வரும் போலியான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்” எனக் கூறியுள்ளார். இது சமூகவலைதளங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

Exit mobile version