விஜய் தொலைக்காட்சி முக்கிய தொடர்களுக்கு தடை? குழப்பத்தில் நிறுவனம்

0
139

சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் தான். அதிலும் விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு என்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

கடந்த காலங்களில் சன் டிவியை பொருத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தது. ஆனால் தற்சமயம் அந்த ரசிகர் பட்டாளம் அனைத்தும் அப்படியே விஜய் தொலைக்காட்சிக்கு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற வருடத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்தது படப்பிடிப்புகள் நிறுத்தம் காரணமாக, தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும் பழைய எபிசோடுகளை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வந்தது. இதன்மூலம் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி பாதுகாத்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த வருடமும் ஊரடங்கு போடப்பட்டதன் காரணமாக, படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் தொடர்களை ஒளிபரப்ப முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், மவுனராகம் போன்ற பழைய தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

அத்துடன் விஜய் தொலைக்காட்சிக்கு முக்கிய தொடர்களாக இருந்து வரும் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா ஆகிய இரு தொடர்களும் தற்சமயம் முடிவுக்கு வர இருக்கிறது. இதன் காரணமாக, டிஆர்பியை ஏற்றுவதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று விஜய் தொலைக்காட்சியின் தலைமை குழப்பத்தில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.