Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விற்பனையாகும் விஜய் தொலைக்காட்சி… விஜய் டிவியை வாங்குவதற்கு கடும் போட்டியில் மூன்று நிறுவனங்கள்!!

விற்பனையாகும் விஜய் தொலைக்காட்சி… விஜய் டிவியை வாங்குவதற்கு கடும் போட்டியில் மூன்று நிறுவனங்கள்…

 

தமிழில் முன்னணி தொலைகாட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவி விற்பனை செய்யவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து விஜய் டிவியை வாங்குவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டு தயாராகி வருகின்றது.

 

ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கிய பின்னர் அதை ஸ்டார் விஜய் என்று மாற்றம் செய்தது. மேலும் உலக அளவில் விஜய் டிவியை பிரபலமடைய செய்தது. அதன் பின்னர் ஸ்டார் விஜய் டிவியை டிஸ்னி நிறுவனம் கைப்பற்றியது.

 

டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தையும் வெற்றிகரமாக நடத்தி வரும் நிலையில் விஜய் டிவியை திடீரென்று விற்பனை செய்யவுள்ளதாக டிஸ்ணி நிறுவனம் அறிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் டிவியை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

 

விஜய் டிவியை விற்பனை செய்வதாக டிஸ்ணி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து விஜய் டிவியை வாங்குவதற்கு மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

 

உலகில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, டாடா, சோனி இந்த மூன்று நிறுவனங்களும் விஜய் டிவியை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மூன்று நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

 

Exit mobile version