Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

தமிழக மக்களில் திரைப்படங்களை விட  சீரியல்களை அதிக அளவில் பார்க்கும் மக்களே அதிகம். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை மனதில் கொண்டே புதுப்புது சீரியல்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு இருக்க முன்னணி தொடர்களில் மிக முக்கியமான தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா. சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்க கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா சீரியலை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தது விஜய் டிவியின் ஒரு சீரியல். அந்த சீரியல் எதுவென்றால் பாரதிகண்ணம்மா தானாம்.

டிஆர்பி ரேசில் ரோஜா சீரியலை நான்காம் இடத்திற்கு பின்னுக்குத்தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது பாரதிகண்ணம்மா சீரியல். 8254 பார்வையாளர்களை கொண்டு மூன்றாம் இடத்திலும் 7768 பார்வையாளர்களை கொண்டு  ரோஜா சீரியல் 4ம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக்கண்டு சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ந்து போயுள்ளது.

Exit mobile version