விஜய் டிவி சீரியல் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்..தோனியுடன் நடித்த லக்கி பாட்டி..!!

0
276
Vijay TV serial Patty got lucky..Lucky Patty starred with Dhoni..!!

விஜய் டிவி சீரியல் பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்..தோனியுடன் நடித்த லக்கி பாட்டி..!!

சிறுவயதில் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த ரேவதி திருமணத்திற்கு பின்னர் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 80 வயதாகும் நடிகை ரேவதி சீரியல்களில் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் பாட்டி கேரக்டர் என்றாலே ரேவதி தான் எனும் அளவிற்கு அனைத்து சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியின், சிறகடிக்க ஆசை, சக்திவேல், பாக்கியலட்சுமி மற்றும் தமிழும் சரஸ்வதியும் ஆகிய அனைத்து சீரில்களிலும் ரேவதி தான் பாட்டி கேரக்டரில் பிசியாக நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறிவிட்டார். இந்த சூழலில் ரேவதி பாட்டிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

அதாவது ரேவதி பாட்டி இந்திய கிரிக்கெட் வீரர் தோனியுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். தோனியை பார்த்தது அதிசயமாக இருப்பதாக ரேவதி பாட்டி மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். முன்னதாக பல விளம்பரங்களுக்கு ஆடிஷன் சென்று கிடைக்காமல் போனதாம். இருப்பினும் யாராவது ஆடிஷனுக்கு அழைத்தால் ரேவதி உடனே சென்று விடுவாராம்.

அப்படிதான் இந்த ஆடிஷனுக்கும் ரேவதி சென்றுள்ளார். ஆனால் ஆடிஷன் முடியும் வரை அவருக்கு செலெக்ட் ஆவோம் என்ற நம்பிக்கையே இல்லையாம். இறுதியாக இரவு 10 மணியளவில் போன் செய்து செலெக்ட் ஆகியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். அப்போது ரேவதியை விட அவரின் குடும்பத்தார் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அப்போது தான் இது எந்த அளவிற்கு முக்கியமான விளம்பரம் என்று ரேவதிக்கு புரிந்ததாக கூறியுள்ளார். மேலும், தோனியை பார்த்தது அதிசயம் தான். அவருடன் நடித்தது லக்கு என்று சொல்வதா அல்லது என்னவென்று தெரியவில்லை. அவருடம் அதிகமாக பேச முடியவில்லை. ஹலோ மட்டும்தான் சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார். தற்போது தோனியுடன் இவர் நடித்துள்ள விளம்பரம் வைரலாகி வருகிறது.