Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புது அவதாரம் எடுத்த vj அர்ச்சனா!

விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு குறைந்த காரணத்தால், கலைஞர், புதுயுகம், ஜீ தமிழ், போன்ற தொலைக்காட்சிகளில் மாறி மாறி வேலை பார்த்து வந்த அர்ச்சனாவிற்கு விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நெகிழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகு விஜய் டிவி அர்ச்சனாவை வெளியே விடவில்லை என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களாக காதலே காதலே, ஓல்ட் இஸ் கோல்ட், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளை அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார் என்று சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருப்பதற்கு அர்ச்சனாவிற்கு போரடித்துவிட்டது. போல தெரிந்துள்ளது தற்சமயம் ரேடியோ தொகுப்பாளராக மிர்ச்சி எஃப் எம் சேனலில் களமிறங்கியிருக்கிறார்.

ஹாய் சென்னை வித் அச்சுமா அட்டகாசம் அன்லிமிடெட் என்ற மகிழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். காலை 7 மணி முதல் 12 மணி வரையில் வாரத்தில் ஆறு நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு அர்ச்சனா நேற்று முதல் தன்னுடைய பணியை தொடங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version