Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சன் டிவிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் விஜய் டிவி! கடவுள துணைக்கு கூப்பிட்டு இருக்கு!

தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருவதுதான் விஜய் டிவி. சீரியல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை அதிகப்படுத்தும் நுட்பம் தெரிந்ததுதான் விஜய் டிவி.

கொரோனா காரணமாக ஜூன் மாதம் முதல் இதுவரை வேறு எந்த ஒரு புதிய சீரியலும் வெளியாகவில்லை என்பது விஜய் டிவியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. 

விஜய் டிவி தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் கடவுளை வேண்டுமாறு ஒரு டுவீட் போட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர்.

விஜய் டிவி வெளியிட்ட டுவீட்டில் ,” சில பல பிரம்மாண்ட  Lanuch-கள் இருக்கு. இந்த மாசம் நல்லபடியா போகணும் கடவுளே” என்று பதிவிட்டுள்ளனர்.

விஜய் டிவி சன் மியூசிக் சேனலுக்கு போட்டியாக விஜய் மியூசிக் என்ற சேனலை தொடங்க உள்ளதாகவும் அது அக்-4 ம் தேதி Launch செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதை கருத்தில் கொண்டே இப்பதிவினை விஜய் டிவியை வெளியிட்டு இருக்கிறது.

இப்படி சன் டிவியின் அனைத்து சேனல்களையும் மூழ்கடிக்கும் வகையில் விஜய் டிவி களமிறங்கி இருப்பது விஜய் டிவி நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version