வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் ஆபாச வரிகள்?… கிளம்பும் எதிர்ப்பு!

0
229

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் ஆபாச வரிகள்?… கிளம்பும் எதிர்ப்பு!

விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் முதல் சிங்கிள் பாடலானர் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியானது. விஜய்யோடு பாடகி மானசி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் நாட்டுப்புற துள்ளலிசை பாடலாக அமைந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்த பாடலை பிரபல பாடல் ஆசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள ‘உச்சுக்கொட்டும் நேரத்துல உச்சகட்டம் தொட்டவளே’ எனும் வரிகள் ஆபாசமாக உள்ளதாகவும், சிறுவர்கள் அர்த்தம் தெரியாமலேயே இந்த பாடலை பாடுவார்கள் என்றும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வரிகளை நீக்கவேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதனால் பாடல் வரிகள் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக விஜய் நடித்த குருவி திரைப்படத்தில் தில்லையாடி வள்ளியம்மையை இழிவுப்படுத்தும் விதமாக வரிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து பின்னர் அந்த வரிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.