Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது; அவர் சிறுத்தையாக வேங்கையாக விரைவில் வெளியே வருவார்!

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்தின் உடல்நலம் குறித்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றிருக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,அவர் கூறுகையில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்.அவரின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இன்னும் 60 நாள் சிகிச்சை மட்டும்தான் மீதம் இருக்கிறது, சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகத் மருத்துவர் தெரிவித்தார். மேலும் தற்போது அவருக்கு 45 சதவீதம் அளவிற்கு உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் சரியாகி உள்ளது என்றும் கூறினார்.

மேலும்,விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது அதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர்.அக்குபஞ்சர் முறையில் அதையும் சரிச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு மற்ற சிகிச்சைகள் அளிப்பது சிறிது சிறிதாக குறைத்து விட்டோம் தற்போது அக்குபஞ்சர் சிகிச்சை மட்டுமே வழங்கி வருகிறது என்று அவர் கூறினார்.

அவர் பேசுகையில் இப்பொழுது விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என்றும், தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும், நன்றாகவும் இருக்கிறார் அவர் விரைவில் சிறுத்தையாகவும் வேங்கையாகவும் கூடிய விரைவில் வருவார் என்றும் மருத்துவர் கூறினார். மேலும் கொரோனோவில் இருந்து மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அவருடைய பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய பழைய நண்பர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அதே போன்ற நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுவதாக விஜயகாந்த் அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துள்ளதாக, மருத்துவர் சங்கர் கூறினார்.

Exit mobile version