Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

#image_title

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார்.

இவரை மட்டுமே நம்பி தயாரிப்பாளர்கள் பல படங்களை உருவாக்கினார்கள். இவரிடம் கன்ஃபார்ம் பண்ணிவிட்டுதான் படங்களை தயாரிப்பார்கள். ஏனென்றால், அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் அந்த படம் ஹிட்டடித்து விடும். நல்ல லாபம் பெறுவார்கள். மொக்கையான படங்கள் கூட இளையராஜாவின் இசையில் படம் ஓடிவிடும். இவரின் தரிசனத்திற்காக பல யாரிப்பாளர்கள் கால் கடுக்க காத்துக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் இளையராஜாவை இசைஞானி என்று எல்லோரும் அழைக்கின்றனர்.

விஜயகாந்த் படத்திற்கு பல மெலோடி பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. விஜயகாந்த் தயாரித்து, நடித்து வெளியான பூந்தோட்ட காவல்காரன். இப்படத்திற்கு அற்புதமான பாடல்களை ராஜா போட்டு கொடுத்தார். பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த் அப்போது இளையராஜாவுக்கு என்ன சம்பளமோ அதை 2 மடங்காக கொடுத்து அவரை மகிழ்வித்தார்.

 

Exit mobile version